பேரெழில் நாடு

நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு

ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட வளநாடு நீயே

பசுபிக்கடலின் ஓரத்தில்
பார்ப்போர் வியக்கும் வண்ணத்தில்
வீச்சாய் வெப்பம் கொண்டாலும்
மூச்சாய் தென்றல் வரவும்
தழுவும் நாடு யப்பான்தானே!

ஆற்றல் கொண்டநாடாக
அமைதி வண்ண பேரெழிலும்
ஆளுமை மிக்க தொழில்நுட்பமும்
விளங்கும் நாடு
யப்பான் தீவே!!

வளங்கள் உன்னுள் நிறைத்திட்டே
வாஞ்சை வல்லுனர்களை
உருவாக்கி
வளமாய் உறையும் சுந்தரமே
வார்க்கும் சுடராய் வையத்தில்

மூத்தோரை நீயும் மதித்திட்டே
முதுமையைப்போற்றும்
பாரம்பரியம்
என்றும் பெருமை உனக்கேதான்
ஏற்றம் பலவும்
கொண்டாய் வாழ்க !!!

நகுலா சிவநாதன்1818

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading