இயற்கை வரமே இதுவும் கொடையே!

நகுலா சிவநாதன்
இயற்கை வரமே இதுவும் கொடையே!

காடு மலைகள் ஆறு நதிகள்
காணும் இன்பம் இயற்கை வரமே
சூழும் உலகும் சுந்தர அழகும்
வாழும் சூழல் வரமழகே!

இயற்கை எழிலும் இறைவன் படைப்பும்
இங்கித பூமிக்கு இனிய வரமே!
உயர்ச்சி காணும் உலக இன்பம்
உன்னத வார்ப்பின் பேரழகே!

இயற்கை வரமே இதுவும் கொடையே
இனிதாய் நிறைக்கும் மரங்கள் வரமே
முயற்சி உடைய வரமாய் நீயே!
மேதினி சிறக்க உயர்வாய் நாளை!!

நகுலா சிவநாதன் 1825

Author: