இயற்கை வரமே இதுவும் கொடையே

ஜெயம்

வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம் காற்று இயற்கையின் செல்வங்கள்
யார் இவைகளை நாசமாக்குவது உண்மையை கூறுங்கள்

உயிரும் உடலுங்கூட அந்த இயற்கையின் கொடை
பயிரும் விளைந்திடும் அதுவாக இல்லையே தடை
பஞ்சபூதங்கள் தந்த வரமே அற்புத இயற்கை
பஞ்சாக்கி பஞ்சத்தை பறக்கவிடும் நன்மையின் பொழிகை

இறைவனின் பரிசை அழிக்க நினைப்பது பாவம்
கறைகொண்ட மனிதா நீயே உனக்கிடுவதா சாபம்
பொறுமையின் போதிமரம் என்பதால் எல்லையை தாண்டலாமா
சிறுமைபுத்தி மனிதா உன்னுயிரை நீயே தீண்டலாமா

Author: