சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நினைவுகள் கனக்கின்றன..

வியாழன் கவி -2250

“நினைவுகள் கனக்கின்றன”
சுமந்த வயிறுகள் சுகமிழந்து
துயர் நிறைந்து கிடக்கிறது
சுழல் காற்று அடித்து ஓய்ந்த
வயல் வெளிபோல் எங்கும்
சின்னா பின்னமாய்க் கிடக்க
ஆண்டாண்டு காலமாய்
அழுதழுது வீங்கிய விழிகள்
கண்ணீர் தான் வற்றி போனது..

கல்லறைகளுக்குள் துயின்றவர்
செல்லரித்துப் போன ஏடுகள்
போலும் சிதைந்தழிந்து போக
வக்கிரத்துள் எதிரி படை
சர்வ நாசம் செய்து போயின
இருப்பவர் இன்னும் தேட
இருப்பறியா உறவுகள் நிலை
தொடர்கதை தானே பூமியில்
கனக்கும் நினைவுகள்
இன்னும் கனத்தபடி தொடருதே..
சிவதர்சனி இராகவன்
27/11/2025

Author: