சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273

மாற்றத்தின் ஒளியாய்..

ஆண்டு ஒன்றின்
அழகிய மலர்வில்
அத்தனை உளங்களில்
மாற்றத்தின் ஒளியாய்
இருளெனும் துயரது
இனி இல்லை என்றாகி
வரு பகை விலகி
வளமது சிறக்க
தமிழர் திரு நாள் தான்
தரணி மலர்ந்ததே..

முயற்சியின் அறுவடை
முழுமைப் பயனாய்
திறனின் மகிமை
திருப்பம் பலதாய்
ஏணியெனவும் ஏற்றம்
தொழில் நுட்ப உலகில்
தொலைவான மகிழ்வு
அருகே வருதலும்
மாற்றத்தின் ஒளியாய்
வேண்டும் பலனை
தருவதே சிறப்பாம்!!
சிவதர்சனி இராகவன்
15/1/2026

Author: