நலம் பெற 103

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026

வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே பெற்று துளிர்வாய் நீ

ஓய்வு இங்கு முடக்கமல்ல
ஆய்வு கொண்டு எழுந்து வா
நேர்மறை எண்ணம் நிறைவைத்தர
நின் மதியும் உம்மைப் பெற

மனவுறுதி என்னும் மருந்தால்
மகிழ்வுடன் பிணிகளை வென்றிடு
மன அமைதியோடு நடை பயிற்சி
மன அழுத்தத்தை அகற்றிடுமே

கடமைகள் கொஞ்சம் காத்திருக்கு
கனவுகளும் சேர்ந்திருக்கு -பெண்ணே
நலம் பெற வேண்டி வணங்குகின்றேன்
ஞானிலம் சிறக்க வந்திடு நீ

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading