போரும் அழிவும்

ரஜனி அன்ரன் (B.A) “போரும் அழிவும்” 05.03.2026

போரும் அழிவும் பாருக்குகேடு
போரும் அழிவும் மரண ஊர்வலம்
வரலாற்றின் நிழலில் வல்லரசின் ஆட்டம்
வளைகுடாப் பகுதியைப் பிரளயமாக்குது
வான்பரப்பினை ஆளில்லாவிண்கலம் ஆக்கிரமிக்குது
நாகரீகம் தழைத்த புண்ணியபூமியில்
சதிகாரக் கும்பலின் அதிகாரவேட்டையில்
குருதியால் எழுதப்படுகிறது நாளையவரலாறு !

பாரசீகத்தின் பழம்பெரும் பெருமையும்
யூதகுலத்தின் மீண்டெழுந்த வலிமையும்
வல்லரசின் தலையீட்டில் மோதிக்கொள்ள
எண்ணைக் கிணறுகளும் பற்றியெரிய
சர்வதேசமும் பதற்றமாகுது சர்வநாசமும் அரங்கேறுதே !

ஏவுகணைகள் வானைப்பிளக்க
எதிர்காலக் கனவுகளும் சிதறிப்போக
அணுவாயுத அச்சத்தில் உலகம்உறைய
அமைதிதேடி அலைகிறதே இதயங்களும்
நாடுகளின் கெளரவப்போரில்
நசுங்கிப்போவது அப்பாவிகளின் உயிர்களே !

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading