பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ…..23.04.2026

யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே பண்பாடு
வேதமெனக் கொள்வோம் பண்போடு
அடையாளம் தந்தது எமக்கு பண்பாடு
அடுத்தவர் துயரினைத் துடைப்பதுவும் எம்பண்பாடு
பண்படுவோம் எம்பண்பாட்டால் !

உழுதலில் நிலம்பண்படும்
அன்பினில் அறிவினில் மனம்பண்படும்
பண்பாட்டில் வையகமே பண்படும்
கல்வெட்டில் செதுக்கிய காவியமல்ல
உதிரத்தில் ஊறிய வாழ்வியல்அறமே பண்பாடு !

தொழில் நுட்பத்திற்குள் தொலைந்து
தொடர்பு எல்லைக்குள் இருந்துபிரிந்து
தொலைதூரம் வாழ்கிறோம்இன்று
காலங்கள் மாறலாம் கோலங்கள் சிதையலாம் – ஆனாலும்
பண்பாடெனும் வேரையும் விழுதையும் பேணி
பண்பாடு காத்து பண்போடு வாழ்ந்திடுவோம் !

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading