சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்

அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து குளிர்ந்திடும்

அவனியில் அன்னையர் நாளில்
பாவ புண்ணிய கணக்கினை
பக்குவமாய் பாங்காய் பரீசிலிந்து
சித்திரகுப்தனிடம் வேண்டும் நாளாகும்

சித்திரை மாதத்து முழுநிலவில்
முத்திரை பதித்த தங்கமாய்
நித்திரை மறந்த அன்னையருக்கு
எத்தரை வாழ்ந்திடும் தர்ப்பணம்
செய்து வணங்கிடும் நாளுமே

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading