முயற்சியே பலம் முனைப்பே திடம்

இரா விஜயகௌரி

முயற்சயின் எழுச்சி முனைப்பை வரைய
முனைபவன் திடத்தில் முயற்சி தொடர
விதைப்பவன் எண்ணம் விரவிப் படர
முயல்பவன் கரங்கள் உழைப்பாய் தொடரும்

எழுச்சியும் வீழ்ச்சியும் இயல்பெனக் கொண்டால்
ஏணிப்படிகள் நாளும் உயரும்
தோற்றவன் கற்றலில்தொடரும் ஆற்றல்
பிழையற புரிதலில்பேதமை விலகும்

ஆற்றலும் அறிவும்அரங்கனைக் காண
இடையறா முயற்சிஈரிழையாகும்
முனைப்பை எழுதிடும் உந்துதல் தருணம்
உலகியல் வாழ்வு திசை திரும்பிட உதவும்

எண்ணக்கருக்கள் ஏற்றம் கொண்டால்
முயற்சி விதைகள் முழுப்பலம் கொள்ளும்
முனைப்பின் தொடுகை முழுதாய் விரவின்
விசை கொண்டெழுபவன் வீரியம் நிறைப்பான்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading