திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

விளையாட்டுப்போட்டி

நகுலா சிவநாதன்
விளையாட்டுப்போட்டி

ஆண்டு ஒன்று வந்திடுவே
அகத்தில் மகிழ்வு தந்திடுமே!
சிறுவர் மகிழும் விளையாட்டும்
சிறப்பாய் நடக்கும் போட்டிகளாய்!

TSS SELM கழக விளையாட்டில்
வீரம் சிரிப்பு கலந்திருக்கும்
முயற்சியுடனே ஓடும் சிறுவர்
முகத்தில் படரும் புன்னகை பலவாய்
பாய்ந்து பாய்ந்து விளையாடும்
பாலர் ஆட்டம் பார்க்கையிலே
பட்டொளி வீசும் வீரம் பாராய்!!

பலமாய் ஓடும் பிள்ளைகளும்
பந்தை பொறுக்க முயல்கையிலே
பலமும் சேர்ந்து ஓங்குகையில்
வெற்றி ஒன்று கிடைக்கையிலே
பற்றி மகிழும் சிறுவர் குழாம்

போட்டி யென்று வந்துவிட்டால்
ஈட்டும் புள்ளி வெற்றியிலே
காட்டும் வீரம் மனத்தினிலே
காதல் கொள்ளும் விளையாட்டில்

நகுலா சிவநாதன் 1859

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading