நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026

இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய் வந்து கனக்குதுமனசு
வெறுப்பையே தந்த கறுப்புயூலை
மறுப்பல்ல உண்மையிது
ஆண்டுகள் நாற்பத்திமூன்று கடந்தபோதும்
நெருப்பின்சூடு இன்னும் தணியவில்லை !

சாலைகளிலும் சிறைச்சாலைகளிலும்
தெருவீதிகளிலும் வீடுகளிலும் கொடூர தாக்குதல்கள்
இழந்த உயிர்களின் நினைவுகளும் இழப்புகளும்
ஒவ்வொரு யூலையிலும் குடையுதே நெஞ்சினை
கறுப்புயூலையின் நெருப்பு நினைவுகள்
கடந்துவந்த நெருப்பாற்றின் நீளப்பெருவழியே !

வன்முறையொன்று விட்டுச்செல்லும் வடுவின்தளம்
இனத்தையே கருவறுத்த கறுப்புயூலை வெறுப்புயூலையே
நெருப்புக்குள் பொசுங்கிய கொடூரமும் திட்டமிட்டகொலைகளும்
கட்டம் போடவைத்ததே அடுத்தகட்டத்திற்கு
நீதிக்கான வலுவையும் தந்துநின்றதே
இன்னொருமுறை மீண்டும் வேண்டாமேயிது !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading