திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர்

பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே

உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே

நடமாடும் மனிதர் பலரில்
கூட இருந்து குழி பறிக்கும்
சிலரை விலக்கி மனதிலே
தெய்வமாய் நிலைப்பவரே

முகந் தெரியா உறவானாலும்
அகங் குளிர ஆபத்தில் தனது
குருதியை மெழுகாக்குபவரே

எல்லையே இல்லா இவ்வன்பு
தொல்லை இல்லாது பழகும்
தூய்மை , விட்டுகொடுக்கும்
தன்மை என்றும் நிலைக்கும்
நட்பென்றாலே இதுவன்றோ .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading