மாறிடும் காலநிலை

கவி இலக்கம் 780 மாறிடும் காலநிலை வெயிலின் தாக்கம் மாறிடும் காலம் வெப்பம் தணிந்து கொட்டிய மழையாய் இரண்டு நாளாய் காலை மழையும் இடையிடை...

Continue reading

தியாகத் திங்களிது…

ரஜனி அன்ரன் (B.A.) தியாகத் திங்களிது… 24.09.2026

தியாக மைந்தன் திங்களிது
பசித்தீயை ஒறுத்த பார்த்தீபனின் திங்களிது
புரட்டாதி வந்ததும் நெஞ்சம் கனக்கும்
தியாகத் திங்களாய் பூமியும் நிறையும்
புரட்டாதித் திங்கள் தியாகத்தின் தினங்களே !

நல்லைவீதியில் தொடங்கிய நோன்பு
நாட்கள் பன்னிரெண்டின் அகிம்சையின் நெருப்பு
உணவின்றி துளிநீரின்றி உருகிய தியாகி
உரிமையை வேண்டிநின்ற உன்னதயோகி
புரட்டாதித் திங்கள் ஒவ்வொரு நாளும்
தியாகத்தின் சுவடாய் எம்மோடு பேசும்
புரட்டாதித் திங்கள் தியாகத்தின் திங்களே !

தமிழின உரிமையின் தார்மீக நாயகன்
அகிம்சை வழியின் அஞ்சாநெஞ்சன்
தன்னையே ஈகம்செய்த தியாகச்சுடர்
தமிழின வரலாற்றின் அழியாக்காவியம்
தியாகத்திங்களின் தியாகமைந்தன் !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading