தியாகத் திங்களிது…
இயற்கை அழகினிலே..!!
நவீனம் இதுதானா?
நகுலா சிவநாதன்
நவீனம் இதுதானா?
பழந்தமிழர் பண்பாடு
பண்பட்டுப் போகுது
நிலமிழந்து நாமும்
புலமதில் வாழ்வாய்
அமிழ்தினிலும் இனிய
அருந்தமிழ் மொழியும்
ஐரோப்பிய மொழிகளோடு
அடிபட்டுப் போகுதோ?
அடுத்த சந்ததிகள்
அன்னைமொழி மறந்துமே!
அடுத்தடுத்த ஐரோப்பிய
மொழிகளுடன் உரையாடல்
அமைதியாய்ப் போகுது
சூழல்மொழியும் வாழும்
;மொழியாய் சுழன்றிடும் வேளை
சுற்றமும் பிறமொழி
சுற்றிடும் நம்வாழ்வும்
புலத்து மொழியும்
புரியாமல் தவிப்பாய்
நிலத்து மொழியும்
பேச்சில் குறையுது
அடுத்த சந்ததியும்
அரைகுறையாயத்; தமிழை
எடுத்துப் பேசுது
எம்மொழியும் இன்று
பேச்சில் குறையுது
மூச்சை இழக்குது
ஐயகோ அகதி வாழ்வும்
ஐரோப்பியர் என்ற நினைப்பும்
சந்ததிகள் மனதில்
சரித்திரமாய்ப் பதியுது!
பழந்தமி;ழர் பண்பாடு
கொடி கட்டியது ஒருகாலம்
நிலமிழந்து மொழியிழந்து இன்று
நிம்மதி குறைந்திடும்
நவீன பொற்காலம்
நகுலா சிவநாதன்1875