Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.06.2024
கவி இலக்கம்-270
“வசந்தம்”
————
வசந்தத்தில் ஒர் நாள் வந்தாள்
வளமாக அழகாக வடிவானாள்
மனதிற்கு இனிமையாக சுவையானாள்
பாரெல்லாம் பரவி விடியல் தந்தாள்
தென்றலாய் மணம் வீசி மயங்க வைத்தாள்
மலர்களாக பூத்து குலுங்கி மணம் பரப்பினாள்
வண்டுகள் தேனீக்கள் பறக்க வைத்து காதல் செய்தாள்
மரம் செடி கொடிகள் பச்சை பசேலென காட்சி தந்தாள்
மக்களோடு இயற்கை உறவாடி மகிழ செய்தாள்
மானிட வாழ்க்கை வளமானதாக்க கைகோர்த்து வருடி நின்றாள்
ஒவ்வொரு குடும்பங்களை வனப்பாக்கி அள்ளி வீசி மகிழச் செய்தாள்
இறைவனோடு இயற்கையும் கலந்து வசந்தம் தந்து மகிழச் செய்தாள்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading