புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

Jeya Nadesan

கவிதை வாரம்-13.01.2022
கவி இலக்கம்-1941
மார்கழியில் உள்ளத்து நினைவுகள்
————————————————
வருடா வருடம் புத்தாண்டும் விடை பெறுமே
இயற்கையின் மாற்றமும் குளிரும் பனியும்
இயேசு பாலன் பிறப்பும் கொண்டாட்டங்களும்
பொல்லா கொடூரம் சொல்லாமல் வந்ததினாலே
எல்லாமே விட்டுப் போகவே மனித எண்ணங்களிலே
ஆழிப் பேரவையின் அழியாத நினைவுகள்
இயற்கையின் சீற்றத்தில் சுனாமி என்ற பெயரிலே
புவி அதிர்வால் கடல் பொங்கி சீற்றம் ஏனோ
எம் இன மக்களின் உயிர்களை உடமைகளை
அழிந்து விழைத்த சோகம் ஆற்ற முடியலையே
ஆண்டுகள் பல கடந்து சென்றாலும்
மறந்திட முடியாத நினைவுகளாக உள்ளமதில்
சொத்து இழந்து சுகம் இழந்து கரை ஒதுங்கிய உடல்கள்
சிந்தை கலங்கி நின்றோர் மீனவர்கள் அதிகம்
கரையோரப் பகுதிகள் பட்ட துன்பம் சொல்லிடங்கா
இரக்கமற்ற செயலாக இடம்பெற்று சென்றதே
காலம் முழுவதும் உன்னை நம்பி வாழ்ந்தவர்கள்
உப்பிட்ட சோற்றுக்கு உணவாக உதவியவைகள்
கணப் பொழுதில் நீயே இரையாக்கி சென்றாயே
கள்ளம் கபடமற்ற உயிர்களை விழுங்கிய கடலே
இனியாவது அலை பாயும் கொடுமையை தணித்திடு

Nada Mohan
Author: Nada Mohan