Jeya Nadesan

கவிதை நேரம்-28.04.2022
கவி இலக்கம்-1501
வேண்டும் வலிமை
—————————
இருட்டான கருவறையில் உருவாகிய மனிதன்
ஒளியான உலகில் விழுந்தவுடன் அழுகிறான்
வாழும்போது நல்லதாக வாழ நினைக்கிறான்
மனித வாழ்வில் சில சில இடர்பாடுகள்
அற்புதங்கள் அதிசயங்கள் நிகழ்வுகள்
பலவாக அகப்பட்டு வாழ்வில் அல்லறுகிறான்
நம்பிக்கை இழந்து நற்சுகம் இழந்து
தும்பிக்கை என்ற தூய்மை அழிந்து
துன்ப துயர் தொடர்ந்திட்டு வரவே
வலிமை குறைந்து மன நோயாளிகிறான்
தன்னம்பிக்கையுடன் வாழப் பழகி
உடல் வலிமை பெற்று உயர்ந்திட வேண்டு்ம்
உழைக்கட்டும் எறும்பெனவே
வலி குறை மக்களுக்கே
பெருகட்டும் அறச்செயல்கள் பேணிட
பேரன்பு நிறையட்டும் பகிர்தனிலே
உருகட்டும் உண்மைகள் காக்க
ஊர் போற்றும் உறவுகளை உதறிடாமல்
உயர்விற்கு உழைத்து உதவிடுவோம்
சீர் போற்றி வாழ்ந்து சிறந்து
சிதைவினறி வலிமையுடன் வாழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading