Jeya Nadesan

கவிதை நேரம்-21.07.2022
கவி இலக்கம்-1543
மனதின் நினைவுகள்
————————–
நாளைய பொழுது நமக்காய் மலரும்
நம்பிக்கையில் இன்றைய பொழுதை
களிப்போம்
நேற்று நடந்தவைகள்
பலதுமாய் கடந்து போனாலும்
கனத்த காலங்களும்
வந்தே போயின
தனிமை நினைத்து கவலையில்லை
சுதந்திர வாழ்க்கையில்
பலதையும் சாதித்ததுண்டு
காலம் போக வயதும் கடக்க
பல கேள்விகள் மனதில் எழுந்தன
தூரத்திலிருந்தும் அன்பு பிணைப்பில்
அழைத்தனர் கூடவே
வாழ்வில் மாற்றம் காண
வாழ்ந்திடும் வழி கண்டு
மனதில் மகிழ்வு கொண்டேன்
நான் விரும்பி செல்லும் உழைப்பில்
என்னை எப்பொழுதும் உயர்த்துமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading