சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-08.12.2022
கவி இலக்கம்-1611
உயிர் நேயம்
————————
ஊரெல்லாம் மகிழ்ந்து பொங்க
அழகு வானில் விண்மீன்கள்் துலங்க
மார்கழியில் பனி பொழிந்து நிற்க
மாட்டுக் கொட்டிலில் பாலகனாக
மரியன்னை மடிதனில் உயிர் நேயமாக
மகத்தான மார்கழி மலராக உதித்தார் இயேசு பாலன்
மனிதத்தின் புனிதம்தான் மனித நேயம்
சாதி மத பேதம் பார்த்தோம்
பலதையும் அனுபவித்து நின்றோம்
தொற்று நோய் பரந்து ஒன்று சேர்ந்தோம்
சாவு கண்ட பின் சமரசம் கண்டோம்
போதைக்கு அடிமையாகி முடங்கினோம்
விழிப்புணர்வு மூலம் வியப்புக்கள் பெற்றோம்
உன்னைப் போலவே அயலவனை நேசியென
உரைத்த வாசகம் செயலில் பெற்றோம்
ஒன்றாக இணைவோம் அன்பினை பகிர்வோம்
புது உலகினைமைப்போம் உறவினில் வளர்வோம்
ஆசிக்கின்றோம் ஆசையாய் உயிர் நேயமாய்
அருள்தரும் மாதகமாக மலர்ந்திடவே
வருவாய் இயேசு பாலா விடியலின் உயிராய்
தருவாய் நிறைவாய் உந்தன் அருளாய்

Nada Mohan
Author: Nada Mohan