Jeya Nadesan

கவிதை நேரம்-18.01.2024
கவிதை இலக்கம்-1799
பொங்கும் உளமே
தங்கும் தையே
———————————–
தையே நீ வந்தாய் தமிழாக வந்தாய்
மெய்யெலாம் அழகு தங்கும் தையே
தென்றலாய் வந்தாய் திங்களாய் வந்தாய்
பொங்கலென்று வந்து மனம் பொங்க வைத்தாய்
புதுப்பானை வைத்து புதுச் சட்டை அணிய வைத்தாய்
மங்கலங்கள் முக்கனிகள் படைக்க வைத்தாய்
சங்கை நாம் செய்தோம் தமிழே நீ வருவாய்
எங்கும் உன் சிறப்பு பாரினிலே இனியவளே
பொங்கும் உளமே நிறைய வருவாய்
நின் வழியில் நிற்கும் நிழல் மரங்கள்
பொன் மலர்கள் மலர் தூவி வரவேற்க
மண் எல்லாம் தங்கும் தை மகளே வந்தாய்
தைப் பாவையாக வந்து தமிழர் மனம் குளிர
சுதந்திர காற்று சுகந்தமாய் சுவாசிக்க
உன் வரவு பார்த்து கண் விழித்து நின்றோம்
தைப் பாவையாய் வந்தாய் செல்வங்கள் பெருகட்டும்
அன்புள்ளங்கள் பகிர்ந்து பொங்கும் தையாகட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading