Jeya Nadesan

கவிதை நேரம்-25.01.2024
கவி இலக்கம்–1807
கொடிய அரக்கனே ஓடி விடு
———————————-
போதை வஸ்து எனும் கொடிய அரக்கனே
நீ ஏன் இவ்வுலகிற்கு வந்தாய்
மானிடர் உனக்கு செய்த பிழை என்ன
இளையோரை அடிமையாக்கி கொல்ல வைக்கிறாய்
நீ இவ்வுலகில் பழி வாங்கத் துடிக்கிறாய்
என இனம் அழியக் காரணம்தான் என்னே
உனக்கு அடிமையாகி இளையோர் பலர்்
பல்கலைக்கழக மாணவர் பாடசாலை உட்பட
வாழ்வை தொலைத்து விட்டு அலைகின்றனரே
உடல் உளம் நலமிழந்து இறப்பை ஏற்கின்றனரே
பெற்றோர் கண்ணீரும் கம்பலையுமாக்கினாயே
இளம் சமுதாய வாழ்வு சீரழிந்து போகின்றதே
போதை வஸ்தே நீ ஏன் இவ்வுலகிற்கு வந்தாய்
இளையோரை அழித்து வேடிக்கை பார்க்கிறாய்
இதற்கு காரணம் யாரென்பது கேள்விக் குறியே
மனிதம் இம்மண்ணில் மலராதா விடிவு கிடைக்காதா
இருண்டு போனது எம் நாடு மட்டுமல்ல
எம் இன மக்களின் உள்ளங்களும்தான்
கொடிய அரக்கனே இவ்வுலகை விட்டு ஓடி விடு
எம் மக்களை நிம்மதியாக வாழ விடு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading