Jeya Nadesan

கவிதை நேரம்-15-02-2024
கவி இலக்கம்-1819
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்
————–
சுவைக்கும் நாவினில் நம் மொழியை
உச்சரிக்க தேன் மழை பொழிகிறது
சுவாச மூச்சினில் கன்னித் தமிழை
காற்றின் மொழியாகி இணைய மூலம் தந்தது
ஓயாது ஓங்கி ஒலித்த நிலை கேட்க வைத்தது
ஒதுங்கி நின்ற எம்மவர்க்கு பலன் தந்தது
எழுத்து மூலம் பலதை எழுத தூண்டியது
பற்பல கவிதைகளை எழுதி கவிஞராக்கியது
நாளாந்தம் எழுதி அறிவை பெருக்கியது
மேடைகளில் கூச்சமின்றி காற்றில் கலந்தது
நாலு பேருடன் நயமுடன் பேச வைத்தது
நல்ல உறவுகளை கண்டு கொள்ள உதவியது
உள்ளத்தில் அறிவைப் பெருக்கி வளர்த்தது
வாழ்விலே உயர வைத்தது மகிழ்வானது
சிகரத்தில் சென்றாலும் சிதறாது தமிழ்மொழி
எம்மை வாழ வைத்த காற்றலையும் குறையாது

Nada Mohan
Author: Nada Mohan