அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.03.2024
கவிதை இலக்கம்-255
“பகலவன்”
———-
பகலவன் பல சிறப்பு பெயர்களில் சிறப்பான்
ஞாயிறு திங்கள் கதிரவன் சூரியன் பரிதி
செங்கதிரோன் என பெயர் பதிப்பான்
காலையில் கதிர்கள் பரப்பி எழுவான்
மதியமதில் உச்சி வெயிலால் சுட்டெரிப்பான்
மாலையில் உறங்க ஓடி ஒளித்திடுவான்
கோடையில் மரம் துளிர்க்க மலர் மலர வைப்பான்
உயிர்கள் உற்சாக பெற வளர்த்திடுவான்
கடும் வெப்பம் தந்து பயிர்களை எரித்திடுவான்
கிணறு குளம் குட்டை வற்ற உயிர் சாக வைப்பான்
இவ் வருடம் கடும் வெப்பம் பகலவன் தருவான்
இயற்கை அழிவு ஆய்வின் வாக்கு சொன்னான்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading