jeyam

கவி 592

சொந்தம் சொர்க்கமாகுமே

ஒருவர் ஒருவருக்காக வாழும் நொடிகள்
இருவர் சேர்ந்தே பாதங்கள் பதிக்கும் படிகள்
எனக்காக நீ உனக்காக நானென
கணக்கிலடங்காத அன்பு நீளும் வானென

இவளருகில் அவன் உருக
அவளன்பை இவன் பருக
அணைத்தபடி செல்லும் அற்புதப் பயணம்
இணைந்த உயிர்களடையும் இப்பிறவிப் பயனும்

காலங்கள் ஆயுளைத் தின்றிடினும்
கோலத்தில் இளமை குன்றிடினும்
அன்பின் பாசத்தின் தரம் குறையாது
கொண்ட வாழ்க்கையின் இனிமை சிதையாது

சொந்தத்தை சொத்தாக அருகாக்கிக் கொண்டு
சொர்க்கத்தை மண்ணிலே உருவாக்கிக் கொண்டு
திருநாளாய்க் கொண்டாடும் அழகிய வாழ்க்கை
வரும் நாளெல்லாம் அறிவிக்கும் உற்சாக வாழ்த்தை

காட்டிவிடும் நேசத்திற்கு வரம்புகளும் உண்டோ
ஊட்டிவிட பாசமதை தாயாய் அவளன்றோ
தேவை தேவி சேவையென அவன் மன்றாடுவான்
பூவையவள் கொடுத்து வரம் கொண்டாடுவாள்

இல்லறம் என்னும் மணம்கமழும் இன்பச்சோலையில்
மெல்லக்கூடி இருபறவைகள் காதல்சொரியும் வேளையில்
மண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடுகட்டிடுமே
இன்பம் உணர்வுக்கு உணவு ஊட்டிடுமே

ஜெயம்
26-01-20222

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading