அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

Kavikco Parama Vsvalingam

வளர்ந்த குழந்ழைதகள் தாமே….

பிறக்கின்ற குழந்தை அழுகின்றது – ஏன்
பிறந்தோம் என்றா நினைக்கின்றது
தரணியில் பிறந்த அக் குழந்தை – தன்
வரவினை உறவிற்கு சொல்கின்றது.

அடுத்தது என்ன என்பதனை
அதுவாய்த்தானே நினைக்கின்றது
எடுத்தடி வைக்கும் முன்னாலே
ஏதோ எதுவோ தடுக்கின்றது.

கருத்துக்கள் என்னும் கையேட்டை
பொறுப்புடன்தானே திணிக்கின்றோம் – அது
வெறுப்பினைக் காட்ட முடியாமல்
வேண்டுமென்றே சிரிக்கின்றது.

பிறப்பினில் பேதம் கிடையாது – அதன்
பெமைகள் எவருக்கும் புரியாது
வல்லார் மட்டுமே பிறக்pன்றார் – அது
அல்லார் இன்னும் பிறக்கவில்லை.

வளர்;ந்த குழந்தைகளே – மண்ணில்
வாழும் தெய்வங்களே
தொட்டிலில் குழந்தைகள் தூங்குவதில்லை
சிந்தித்தபடியே சிரிக்கின்றன.

சந்திக்கும் அனைத்தையுமே
சவாலாய் எண்ணுங்கள் – அந்த
சாதனை ஏட்டினை சந்ததிக்காய்
எழுதிடச் செய்யுங்கள்.

உங்களை நம்புங்கள்
பிள்ளைகள் உங்கள் அங்கங்கள்
பெருமை கொள்ளுங்கள்
பேதமை தள்ளுங்கள்.

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading