அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

pon.tharma.

வணக்கம் .
இது வியாழன் கவி .19.04.23
இலக்கம் -540
தாத்தாவும் நானும் .
:::::::::::::::::::::::::::::::::::::
மூத்த குடிமகனார் ,முழு நேரமும் முனைப்புடன் தேட்டம் .
ஆத்துப் பறந்துமே நானும் ,கூடவே என்றுமே ஓட்டம் .

வயதினில் வேற்றுமை , காட்டும் .(எங்க )
வெளி வேஷத்தில் ,இருவரும் இணை இல்லாத் தோற்றம் .

நரை ,திரை இருவர்க்கும் ,சமமாக உண்டு .
நடுத் தண்டினில் ,கோணலும் சேர்ந்துமே உண்டு .

அகண்ட பெருத்த நல் அழகான கண்கள் (தாத்தாவிற்கு)
ஆயிரம் விண்மீன்கள் ,தோரயமாகக் காட்டும் ,பேர்த்தியின் –
கண்கள் .
தாத்தாவும் நானுமே ,என்றும் பிரியாத பந்தம் .
(நான்)தளர்வின்றி அவரோடு ,இணைந்திட்ட சொந்தம் .
பொன்.தர்மா

முக்கிய குறிப்பு .
கவிதை ஒளி வடிவிலும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது .

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading