Selvi Nithianandan

மீளெழும் காலம் (520)

அவதியாய் ஓடி வந்து
அகதி எனும் முத்திரை பதித்து
சகதி போன்ற வாழ்வில் சிக்கி
நிர்க்கதியாய் தொலைத்த நிலைபாரீர்

ஊர்விட்டு வந்து உணவையும் மாற்றி
உண்டகைதனை மறந்து கரண்டியை தேடி
ஊட்டிக்குளிர்போல் உள்வீட்டு வாழ்வு
ஊருலா என்று தடம்புருளும் நாமும்

ஒருதலைமுறை வாழ்வு புலத்திலேஇன்று
ஒற்றுமைகூட வேற்றுமையாய் போக
ஒருவேளை உணவுக்காய் உயிரும் போகுது
ஒட்டுமொத்த நாடும் ஊசலாய் ஆடுது

பணம் பணம் பஞ்சமாய் நாடாம்
பசியும் மறந்து வரிசையில் பலராம்
பட்னி விழிம்பில் தற்கொலை இறப்பாம்
பகிர்ந்து உண்டால் பலரை காத்திடலாமே

Nada Mohan
Author: Nada Mohan