Selvi Nithianandan

தேடும் விழிக்குள் தேங்கிய வலி (528)

நோட்டம்விட்டு தேடிய போதும்
ஆட்டம் காட்டும் அரசியல் நோக்கு
தேட்டம் அழித்தும் தேடும் உறவுகள்
தேங்கிய கண்ணீருக்குள் மெல்லநகர்வு

தாய் தந்தை பிள்ளையென
தரவுப் பட்டியலின் நீளம்
தாங்கமுடியா வேதனையால்
துடிதுடிக்கும் உறவுகளின் சோகம்

இன்று நாளை என எண்ணியபடி
இரண்டாயிரத்து பதின்நான்கு நாளும்நகர
இலங்கைத்தீவில் இப்படிச் சூழ்ச்சி
இரகசியமாய் கைதானவர்களின் நிலையே

இன்னும் எத்தனை நாட்கள்
வலியுடன் விழிமேலே காத்திருப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading