Selvi Nithianandan

மாற்றமாய் இப்போ
காலசக்கரத்தில் கடிகாரமுள்ளின் நகர்வு
கடுகதியான இரவுநேரத்தின் குறைவு
கனமான மனதால் உடலும் சோர்வு
கண்ணீரும் தாரையாய் வந்து நனைப்பு

காலை மாலை வீட்டிலே இருப்பு
கால் வீக்கத்தால் நரம்பும் விறைப்பு
தூக்கம் குறைந்து தலையும் சுற்றல்
ஏக்கம் மறந்து பலதும் கற்றல்

கடிகாரம் சுற்றும் விரைவின் வேகம்
கடந்து போவதால் மாற்றத்தால் தாகம்
கணிப்பே ஒவ்வாமை சேர்ந்திடும் நேரம்
காலத்தால் அழியாது வருவாய் நாளும்

கணீரென்று அடிக்கும் கடிகார துடிப்பு
கடமையை செய்ய நீயே சிறப்பு
களிப்பாய் நகர்த்த நீயும் பொறுப்பு
கற்றுக் கொள்கிறேன் உன்னால் நல்படிப்பு

Nada Mohan
Author: Nada Mohan