Selvi Nithianandan

வளர்ந்த குழந்தைகள் தாமே (567)

வளர்ந்த குழந்தைகள் தாமேயென
விட்டுவிடுவதால் விளைவும் வந்திட
வீணாய்போன செலவும் சேர்ந்திட
வந்திடும் சோகத்தால் கவலைதரும்

விடுமுறை நாட்களில் வெளியிலே
இரவுபகலாய் கூட்டமாய் தெருவிலே
தூக்கம் கலைந்து போகுது வீட்டிலே
வளர்ந்த பிள்ளையால் தொல்லைதரும்

வளர்ப்பு சரியில்லா ஏளனப்பேச்சு ஒருபுறம்
வரட்டு கெளரவப் பேச்சும் மறுபுறம்
வலி சுமந்த பெற்றவர்களாய் இன்றும்
விழிநீர் வழிந்தோடும் அமைதியாய் நாளுமே

Nada Mohan
Author: Nada Mohan