இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

காற்பந்துத் திருவிழா…..

ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா….40 11.06.2026

உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா
உன்னதமாய் தொடங்குதுஇன்று
நான்காண்டிற்கு ஒருமுறை வரும்விழா நாடுகள்தாண்டியவிழா
கால்கள்ஆடும் கவின்கலை கண்களுக்குள் மின்னும் பந்தின்அலை
பந்தின் பின்னால் ஓடுவதே இங்குபெருமை !

பச்சைப்புல்வெளிப் போர்க்களத்தில்
பாய்ந்தோடும் மானிடப் பேராற்றல்
வலையைநோக்கிப் பாயும்கணைகள்
தடுத்து நிறுத்த துடிக்கும்கரங்கள்
தனிமனிதஆட்டம் இங்கில்லை
கூட்டுமுயற்சியே இவர்களின்எல்லை
காற்பந்தென்பது வெறும்விளையாட்டல்ல
உலகையே குடும்பமாக இணைக்கும் பேரற்புதம்
மானுடம்பாடும் மகா காவியம் !

கோலென்ற ஒற்றைச்சொல்லில் கோடிநெஞ்சம் துள்ளிக்குதிக்கும்
தோல்வியின்கண்ணீரும் வெற்றியின் புன்னகையும்
ஒரேபுல்வெளியில் சங்கமிக்கும்
களத்தில் எதிரிகளாய் மோதினாலும்
கணத்தில் ஆட்டம்முடிந்ததும் அணைத்துக் கொள்ளும்நட்பிது !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading