Selvi Nithianandan

எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே (573)

வித்தாய் முளைத்தாய்
விருட்சமாய் வளர்வாகும்
வீரியமே மூச்சாய்
வையத்துள் வாழ்வாகும்

எழுத்தின் உருவம்
ஏடாய் சிறக்கும்
எண்ணின் வடிவம்
எழுச்சியாய் பிறக்கும்

தரணியில் சிறப்பு
தடைகள் உடைப்பாகும்
தமிழின் பிறப்பு
தரமாய் உயர்வாகும்

எழுத்தின் வித்தே
ஏராளாள மொழியாகும்
ஏகமாய் படர்ந்து
ஏற்றமாய் வேரூன்றுமே.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading