பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன் பள்ளிப்பருவத்திலே பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம் துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ! அள்ளி அறிவைப் பெற்று...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி பள்ளிப் பருவத்திலே அன்று துள்ளித்திரிந்ததொரு காலம் அள்ளிப்பருகிய அறிவின் துளி கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி உள்ளக்...

Continue reading

Selvi Nithianandan

அகதி நாம் பெற்றவரமா (575)

நாடுகளிடை ஏற்பட்ட பாரிய தளர்ச்சி
நலிணக்கப் பாட்டால் ஏற்பட்ட சூழ்ச்சி
நிலத்தை விட்டு புலம்பெயர்ந்த வீழ்ச்சி
நல்லாட்சியால் பெற்றதே அகதி வளர்ச்சி

தாய்நாட்டு சுவாசம் தனை மறந்து
தாய் உறவுகளை எல்லாம் பிரிந்து
தனித்து தவித்து மகவுகளை இழந்து
தஞ்சமாய் வந்து முத்திரை பதித்து

அகதி பட்டத்துடன் அவதியாய் ஓட்டம்
அரசியல் ஆளுமை அமைதியாய் ஆட்டம்
அதிகார வர்க்க ஆட்சியின் திட்டம்
அரியணை ஆசையால் வந்ததே நாட்டம்

முகத்திரை கிழிக்க பலரக போராட்டம்
முடியுமா இன்னும் பலருக்கு திண்டாட்டம்
முற்று பெறாமல் நாளுமே மண்டாட்டம்
முனைந்து எழுந்தும் முடியாத சாபமாய்

Nada Mohan
Author: Nada Mohan