Selvi Nithianandan

ஒளியின்றி ஒளிர்வெங்கு

இயற்கை படைப்பிலே
இதுவும் ஒன்று
இணைவாய் இருப்பதும்
இருசுடராய் நன்று.

இயற்கை இருளாகி
செயற்கையும் மிளிர்வாய்
இணைப்பும் இப்போ
மின்ஒளிச் சுடராய்

வர்ணஜாலமாய் தெருவும்
வாசலிலே அலங்கரிப்பும்
வாஞ்சையாய் ஈர்க்கும்
ஒளியின் அழகும்உளமே
மகிழுமே

Nada Mohan
Author: Nada Mohan