Selvi Nithianandan

கல்லறை வீரர்களின் கனவிதுவோ (590)

தாய்மண்ணை மீட்க
தன்னுயிரை தியாகம்
செய்த வேங்கைகள்
கனவுகள் ஒருபுறம்
கல்லறை மறுபுறம்
சாட்சியாய் சான்றுகள்

காலமும் செல்லுதே
ஞாலமும் அழுகுதே
கல்லறை ஒளியும்
காவியம் ஆகுதே

வீரமறவர்களின் தியாகம்
வீண்போகாது பாரினில்
விதையாய் விருட்சமாய்
விசாலமாய் வேறூன்றும்

எம்உயிரை காக்க
ஈகைசெய்த செம்மல்கள்
இருகரம் ஏந்தியே
ஆவலாய் காத்திருப்போம்

Nada Mohan
Author: Nada Mohan