இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

பொங்கும் உளமே
தங்கும் தையே
உளமும் உவகையில் மலர
ஊரும் தூக்கமின்றி உலவ
உறவுகளும் ஒன்றாய் சேர
உதித்திடுமே தைமகளும் கூட

உதயத்தில் அகமும் நிறைந்திட
உழவரின் கதிரும் உள்பொருளாய்
உணவு படையல் உபசரிப்பும்
உச்சம் தலைவரை ஆட்கொள்ளும்

புலம்பெயர் மண்ணில் பலமாற்றம்
புதுப்புது எண்ணமும் பரிமாற்றம்
பொங்கிடும் உள்ளமும் ஏமாற்றம்
பொசுங்கியே போகுது தையாய்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading