Selvi Nithianandan

அண்டைய உறவுகள் (599)

அருகருகே மூவராய் பெண்ணாய்
ஆரோக்கியம் குன்றிவிட்டா இன்றும்
அவசர உதவி நாடியே
அடிக்கடி பேசும் உறவுகள்

இரவும்சரி பகலிலும்சரி
ஏலாதுவிட்டா தயக்கமின்றி
எப்போதுமே பெல்டித்தோ
கதவினைத் தட்டியோ
கதைக்கும் உறவுகளாய்

பொங்கல், பிரியாணி,ரோல்
வடை, தொதல்,கொடுப்பதுண்டு
முகமலர்வுடன் எம்முன்னே சாப்பிடுவதும்
முன்செய்த புண்ணிய பலனாய்தானும்

வைன் சிகரட்புகை அவர்களதுவீட்டுள்ளே
வைத்திய ஆலோசனை தடையாலே இப்போ
தாய்போல அரவணைப்பில் பெருமிதமும்
தனயனும் எப்போதும் உதவிடுவான்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading