வர்ண வர்ணப் பூக்கள் 65
வர்ண வர்ண பூக்களே!
vகவிதை நேரம்-07.11.2024 கவி இலக்கம்-1944 வாழ்த்துதல் நன்று போற்றுதல் சிறப்பு ———————– புலம்பெயர் தமிழ் வாழ் நாட்டினிலே சரித்திரம் படைத்த மா நகரினிலே புதுமை படைத்த இணையமாக லண்டன் பாமுக வானொலியாக இயக்குனர் அதிபர் தொகுப்பாளராக உதவிக் கரமாக தொகுப்பாளினியாக நடா மோகன் கலைவாணி மோகன் ஆளுமை திறமை சுய ஆற்றல் சங்கமாக 1989 ல் உதித்த சந்திரோதய செய்தியாக 36 வது வருடம் கால் பதித்து பெயரானதே உழைப்பின் அறுவடையின் வெகுமதியாக மின்னொளி கரகோசத்தில் ஊடகருக்கு விருதாக ஆசான் விருது கொடுக்க மாணவரின் பரிசாக குடும்பமே ஆரவார அக்களிப்பு குதூகலமாக பாமுக உறவுகள் வாழ்த்தலில் பெருமையாக பலரும் கலந்து பகிர்ந்து கொண்டது சிறப்பே ஆற்றல் அனைத்தும் அர்ப்பணித்து அமைந்ததே மாண்புடன் மகத்தான சேவைகள் உயர்வே பணிகளும் சிறந்து பண்புடன் வளர்வே வாழ்த்துதல் நல்லதாக போற்றுத
கவிதை நேரம்-07.11.2024
கவி இலக்கம்-1944
வாழ்த்துதல் நன்று
போற்றுதல் சிறப்பு
———————–
புலம்பெயர் தமிழ் வாழ் நாட்டினிலே
சரித்திரம் படைத்த மா நகரினிலே
புதுமை படைத்த இணையமாக
லண்டன் பாமுக வானொலியாக
இயக்குனர் அதிபர் தொகுப்பாளராக
உதவிக் கரமாக தொகுப்பாளினியாக
நடா மோகன் கலைவாணி மோகன்
ஆளுமை திறமை சுய ஆற்றல் சங்கமாக
1989 ல் உதித்த சந்திரோதய செய்தியாக
36 வது வருடம் கால் பதித்து பெயரானதே
உழைப்பின் அறுவடையின் வெகுமதியாக
மின்னொளி கரகோசத்தில் ஊடகருக்கு விருதாக
ஆசான் விருது கொடுக்க மாணவரின் பரிசாக
குடும்பமே ஆரவார அக்களிப்பு குதூகலமாக
பாமுக உறவுகள் வாழ்த்தலில் பெருமையாக
பலரும் கலந்து பகிர்ந்து கொண்டது சிறப்பே
ஆற்றல் அனைத்தும் அர்ப்பணித்து அமைந்ததே
மாண்புடன் மகத்தான சேவைகள் உயர்வே
பணிகளும் சிறந்து பண்புடன் வளர்வே
வாழ்த்துதல் நல்லதாக போற்றுதல் சிறப்பே
