Vajeetha: அழியாத கோலங்கள்

: அழியாத கோலங்கள்

வான்நிறை வடிவழகு
வரையாத இறை கோ வழகு
வெள்ளி பூக்கும் ஒளியழகு
வென்வானியல் இரவழகு

தீட்டாத ஓவியம்
திகட்டாத காவியம்
மறைவான செயலியல்
மா இறை சத்தியின்
அழியாத கோலங்கள்

உயிர் அனுவின் உதயம்
உருவாக்கத்தின் புனிதம்
ஆண் பெண் இரு வர்க்கம்
ஆண்டவன் படைப்பின் மார்க்கம்

ஆண்டாண்டு தோறும்
அழியாத கோலம்
மாண்டவர் திரும்பாத பாலம்

மரங்களின் கோலம் மலர்கள்
மரத்தின் கனி விதை தொடர்வுகள்
அழியாத கோலம்

இயற்கையின் கோலம்
இறை நீதியின் அதிசய
அழியாத கோலம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading