vajeetha Mohamed

பழமை

அழகிய நினைவு
பழமையின் பதிவு
வாழ்க்கை ஓர்சொர்க்கம்
வாசல் விளையாட்டு
பல பக்கம்

மண் உண்டியலில் சில்லறை
தயிர்டின் போத்தல் கொள்விலை
சவ்வுமிட்டாய் தோடம்பழ மிட்டாய்
தும்புமிட்டாய் மணியடித்தால்
பண்டைமாற்று பகிர்வு அழகு

சையிக்கில் டயர் அடிமட்டை
குறும்பெட்டி தென்னைஓலை
ஆபரணம் எத்தனை விளையாட்டு
பணமில்லா இயற்கையின்
இலவச பரிமானம் பழமை

பாடசாலை நேரம்
பிறந்தநாள் பாடல் வானோலியில்
இதுவே ஏழுமணி நேரம்
பினாட்டை பென்சிலில் குற்றி
பகி௫ம் பாசத்தின் நேசம்

நெங்கு வண்டி செய்தும்
சிறுஓடைகளில் மீன் இறல்பிடித்தும்
இரட்டை சடை தோழியோட
இணைந்து பினைந்த நிகழ்வு
பழமைகள் என்றும் என்மறையா
நினைவு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading