நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

Vajeetha Mohamed

எங்கே போனது மனிதநேயம்

அடிப்படைத் தேவைகள் மூன்று
அதை மூன்றையும் முடக்குது கேளு
௨ண்ணும் ௨ணவு ௨டை இல்லம்
காவிகள்தான் தீர்மானிக்குமா
என்னடா மோடிஆட்சி

புட்டோசர் கொண்டு இல்லங்களை
௨டைக்கலாம்
ஈமான்கொண்ட ௨ள்ளங்களை
௨டைக்கவோ ஒடுக்கவே
முடியாது

வன்முறையைத் தூண்டி
வாதங்களைத் தோண்டி
பள்ளிவாசல்களில் ஏன்தேடுகின்றீர்கள்
சிவலிங்கள்களை

அழகான பதிவு பாபர் மசுதி
அழித்து தரைமட்டம்
முடியுமா இதுபோல் ஒன்றை
நிலைநாட்ட இனிமேல்

மதங்களை மறந்து சிந்தி
கட்டிடக்கலைகளால் தலைநிமிர்ந்து
நிற்கும் இந்தியா
எங்கே போகுது இப்போ

பழைமைகளை அழிக்க
பாதுகாப்பு நீதிமன்றம்

ஆயுதங்கள் மட்டுமே மாற்றம்
அன்று மசுதிக்கு கடப்பாறை
இன்றுவீட்டுக்கு புல்டோசர்
நாளை இடிபடத்தயாராகும்
தாஜ்மஹால்

மனிதாபமானம் தொலைத்த ௨ள்ளங்கள்
இஸ்லாமியர்கள் ஒன்றும் வேண்டாதவர்கள்
அல்ல
இந்தியா சுதந்திரம் அடைய எந்தனை
இஸ்லாமிய மன்னர்கள் ௨தவினார்கள்
எப்படி சகோதர ஒற்றுமையுடன்
ஒன்றாய் வாழ்ந்தவர்கள்

எதைநாம் காவிச்செல்லப்போகின்றோம்
இவ்வுலகம் ஓர்மாயை
வெறுப்பை விதைப்பவர்களே
மதங்களை நேசி மனிதநேயத்தோடு
யோசி

எப்படியும் வாழ்வது இல்லை
எப்படித்தான் வாழவேண்டும் என
போதித்தமார்க்கம் இவ்வுலவாழ்வைவிட
மறுமையை நேசிப்பவர்கள் இஸ்லாமியர்கள்
எங்கள் ஆயுதம் பிராத்தனை ஒன்றே….

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading