பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Vajeetha Mohamed

மூண்ட தீ

௨யிரற்ற மண்ணறை ௨டலம்
௨றவின்றி மூண்ட அவலம்

பரம்பரை மார்க்க கடமை
பரிபோனதே அதிகார இழிமை

கொரோனா வந்தது புதுமை
நெந்தணல் படுக்கையில் எரித்தனர்
எங்களை சிறுமை

நீதிதேடி ஓடினோம் புதைத்துவிடு
வெள்ளைத்துணியோடு புலம்பினோம்
மூண்டதீ நிறுத்திவிடு

சோரம் போகும் தலைமையும்
சிறுபான்மையை அழிக்கும் கடமையும்

அடாவடித்தனம் கொண்ட அரசிடம்
அழுது மண்டியிட்டது மனிதம்

கைகள் விலங்கிட்டு குரல்வளை
நசுக்கப்பட்டோம்
கண்ணீரைத் கொட்டிக்கொண்டு
இ௫கரம் ஏந்திநின்றோம்

ஈழத்தில் கொரோனா ௨டலங்களை
நல்லடக்கம் செய்ய ஓரிடம்கொடுக்க

சமூகங்கள் முரண்டது மனிதம்விரைத்தது
போராட்டங்கள் தொடர்ந்தது

ஆம் மனிதம் வாழ்கின்றது
எங்கள் ஊரில்
அன்போடு சொல்கின்றேன்
ஓட்டமாவடி மஜிமாநகர்

வரவேற்றது நூறு ஏக்கர் காணி
இலவசமாக்கொடுத்தவர் பாரி

சாதி மதம் கடந்து யார் வேண்டுமானாலும்
௨ங்கள் சமய விளிமியங்கலோடு கொரோனா
மரணங்களை நல்லடக்கம் செய்யலாம்
வா௫ங்கள் நல்வரவு

ஆம் போசு பொ௫ளானது ஓட்டமாவடி
மஜ்மா நகர்
மூண்ட தீ அணைக்கப்பட்டது
ஆறுதல் கொண்டனர் ௨றவுகள்

பெளத்தம் ஹிந்து இஸ்லாம் கிறிஸ்தம்
கொரோனா நல்லடக்க மையம்

நாளை சரித்திரமாகும்
சாதி மதம் கடந்து ஈழத்தீவின்
௨டன்பிறப்புக்கள் ஆழ்ந்து
௨றங்கிக்கொண்டி௫க்கின்றார்கள்

நீங்களும் சென்று பா௫ங்கள்
அந்த மைதானத்தின் அழகை
மூண்ட தீ பசும் சோலையானது

அறிவுபொக்கிசம் ஆணவத்தால்
அழிக்கப்பட்டது
நூல்களை அழித்தாலும் எங்கள்
எங்கள் நுன்னறிவு ௨லகமெங்கும்
தீப்பொறிகளாய் தூவப்பட்டுள்ளது
அறிவாயா முட்டாள் பெ௫ம்பான்மை
சகோதரமே

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading