அபிராமி கவிதாசன்

06.06.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -225/
தலைப்பு !
“ஆறுமோ ஆவல் “

அன்னைப் பூமி
மடிதனிலே – என்னை
அள்ளி அணைத்த
தாய் மண்ணே !

தத்தித் தவழ்ந்து
நடைபழகி – விழுந்து
முத்தம் பதித்த
முதல் மண்ணே!

உன்னைத் தொட்டு
சுவைத்த பின்புதானே
சுவையை அறிந்தேன்-என்
சொந்த மண்ணே !

வெள்ளைச் சீருடையில்
வெண்புறா நானும்
விழுந்து எழுந்ததும் -உன்
மடி மண்ணே !

நட்பின் குழாமுடன்
நான் கூடிக்குழாவி
கொஞ்சி மகிழ்ந்த
நன்செய் மண்ணே !

தோட்டப் பயிரும்
தொண்மைத் தமிழும்
நாட்டமுடனே நானும்-உன்னால்
அறிந்த மண்ணே!

இதயம் ஓரமாய்
இன்னும்பல நினைவுகள்
இப்படியாக – என்னை
எட்டிப் பார்க்கிறதே
ஏக்கமுடன் என்தாய்மண்ணே !

உன்னை விட்டுப்பிரிந்தேன்
விடிவே இல்லை !
ஆவலும் கொண்டேன்
ஆறுமோ மனமும்-என்
சொந்த மண்ணே!

திறனாய்வு மிக சிறப்பு
நன்றி பாவை அண்ணா🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading