அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-219
தலைப்பு !

“ஆற்றல்”
ஆற்றல்கள் பலவற்றை
ஆட்க்கொண்ட் ஆத்மா
ஆயிரம் கனவோடு
ஆர்பரிக்குது ஓர்ஜீவன்

ஏதேனும் ஓர்சக்தி
எப்படியும் அமைந்திருக்கும்
எத்தனையோ சக்திகளை
எப்படித்தான் கொண்டீரோ

ஒவ்வொன்றும் ஓர்சக்தி
ஒவ்வொரு ஆற்றலுக்கும்
ஓர்ஒளி வடிவமுண்டு
ஒளிர்கிறது தினம்தோறும்

பன்முகத் திறனாலே
பாரினில் பலவடிவம்
பக்கங்கள் ஒவ்வொன்றும்
பண்புகளை காட்டிடுதே

நிறைகுடம் தழும்பிடுமோ
நிறைமதி ஞானமுடன்
நிலாப்பெண் தேய்கிறாள்
நித்தமும் நினைவாளே

இப்படியும் ஓர்ஜீவன்
இத்தரணியில் எப்படி
இதயமற்று தடமாறியது
இன்னுமே கனவுதான்

அத்துணைக்கும் காரணம்
அவரின் ஆற்றல்மிகு
அற்புத செயல்கள்தான்
அடிமையாக செய்தனவே

நன்றி வணக்கம்🙏🏻
அபிராமி .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading