இரா் விஜயகௌரி

தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி்

உயிர்க்கூடு சுமக்கும் ஏகாந்தம்
உயிர்வலி இழைக்கும் பிரிவின் வலி
பசி பிணி தொலைத்த பரிதவிப்பு
பார்க்கும் இடமெங்கும் தேடல்கள் தாம்

விடை காணா கேள்விக் கணைகள்
விழிக்குள் சுமக்கும் பந்தத்தின் இழை
எங்கு. ஏது எப்படி யாரால் என்றெல்லாம்
பின்னித்தொடுக்கும் போர்க்கணைகள்

இறக்கி வைக்க முடியாத பந்தம்
ஏதிலிகள் ஆகி விட்ட பெருநொடிகள்
பேதலிக்கும் நெஞ்சின் வலி தீர
கட்டி அழ முடியாத பெருஞ்சிறை

கனவுகளுக்குள் காத்துக்கனியும். நொடிகள்
விழித்தால்வேரறுந்த ஆலமர விழுதுகளாய்
எதனை வலியென்று பரிந்துரைக்க
அம்மா உன் ரணம்ஆற்றிடவொண்ணா துயர்

Nada Mohan
Author: Nada Mohan