கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

எல்லாளன்

அந்த நாளில்
அதிக சனிகளில்
எங்கள் ஊரில் எத்தனை வேள்விகள்
ஆடு கோழிகள்
அவரவர் நேர்த்தி
பீடைகள் விலக
பெரு விஷ யந்து
வீடடையாமல் விலக
வேண்டி ,என்றெலாம்
நேர்த்தி
கருகம்பனை எம் அருகு ஊர் ஆலயம்
கெளணாவத்தை
வைரவர்
வேள்வி நினைவு
இன்றும் மனதில்
ஆயிரம் ஆயிரம்
ஆட்டுக் கடாக்கள்
மூவிரண்டாயிரம்
கோழி சேவல்கள்
எல்லாம் பலியாம்
இன்றும் தொடராய்
ஊரே திரளும்
உச்சாகமாக
கன்னர் கடாத்தான்
கண்ணை உறுத்தும்
பென்னம் பெரிய
மாட்டின் அளவு
என்னே அழகு
ஊர்வலமாக
வீட்டில் இருந்து
வீதி உலாவாய்
கூட்டி வருவர்
கோலாகலமாய்
உயிர் வதை என்பர்
ஒரு சில பேர்கள்
ஆயினும் ஊரில்
அதுவே தொடராய்…

Nada Mohan
Author: Nada Mohan