ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

சிவருபன் சர்வேஸ்வரி

ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

ஒளிமயமான எதிர்காலம் ஒளிர்ந்துமே துலங்கிடவும்
வழியது மேவிட வார்த்தையும் இலங்கிட
கனிந்திடும் இன்பம் கவலைகளைப் போக்கவும்
விளித்து விளம்பிட விண்கூவி நின்றிட

இனித்த பிறவி எடுத்தபயன் அறிந்திட
கனிந்தநல் மனதில் கருணையும் கூடிட
பனித்துளி போன்றே எம்பாவும் தெளித்திட
திணித்திடும் திகழமுதம் தித்திப்பாய் இனித்திட

அவைக்கு ஓர்விருந்து அமுதமாய் பொழிந்திட
சுவைக்கு நல்மருந்தாய் தூய்மையும் அடைந்திட
நகைச்சுவை கொடுத்து மகிழ்விக்க வேண்டும்
அகமதிலென்றும் அறத்தின் வழியே ஏகுவோம்
இகமதில் ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading