பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

ஒவ்வாமை 671 Selvi Nithianandan

Selvi Nithianandan

ஒவ்வாமை
சுட்டெரிக்கும் வெய்யிலும்
சுழன்றடிக்கும் காற்றும்
சுற்றுச்சுழல் மாசும்
சுழளும் ஒவ்வாமையும்
சுண்டித்தானே இழுக்குதே

சுகமாய் நானிருந்தும்
சுருண்டு போகையில்
சுதந்திர மழையும்
சுடர்விடும் திரிபோல
சிவக்குது கண்ணும்

மூச்சடைப்பு முகமெரிவு
இருமலுடன் தும்மல்
இதெல்லாம் தாண்டி
இடர்படும் கவலையும்
இப்படியே போகுது

ஓராண்டு வேலை
ஒருமாத காலம்
விடுமுறை மோகம்
விற்றமீனும் காணா
விடியலாய் தாகம்

கால்வீக்கம் ஒருபுறம்
கண்பிரச்சனை மறுபுறம்
காலம் தான்பதில் கூற
காத்திருப்பாய் நானும்
காத்திருப்பாய் நானும்

Nada Mohan
Author: Nada Mohan