கணப்பொழுதில்

ஜெயம் தங்கராஜா

வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது
நிலையானதல்ல மாறிக்கொண்டேயிருக்கும்

ஒரு சிறிய நொடிகளைக்கொண்டு
குறிப்பிட்ட காலத்தின் நிகழ்வு
ஒரு கணப்பொழுதில் மாறக்கூடிய
நிச்சயமற்றதான ஒரு விஷயம்

வாழ்க்கை மிகவும் குறுகியது
ஒவ்வொரு கணப்பொழுதும் கிறுக்கியது
எவ்வளவுதான் இந்த வாழ்க்கை
இவ்வளவுதான் இந்த வாழ்க்கை

இனிமையான ஒரு வாய்ப்பு
உருவாக்கி கணங்களும் தேய்வு
நிலைகுத்தி நிற்கும் ஆற்றல்
உலகத்தில் யாருக்கும் இல்லை.

ஒருதர மண்ணுலகச் சந்திப்பு
இருக்குமட்டும் அனுபவித்தால் தித்திப்பு
வாழுங்கள் நாட்களோ குறைவு
நிம்மதியே தந்திடும் நிறைவு

29-06-2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading